chennai:அழகுக்கு ஏத்த மாதிரி ரேட்டு! வாடகை வீட்டில் மஜாவாக நடந்த ஐடெக் விபச்சாரம்!

Advertisements

சென்னையில் வேலை தேடி வரும் பெண்களைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வளசரவாக்கம் மற்றும் காரம்பாக்கம் பகுதியில் இளம் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் நடப்பதாக வளசரவாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போரூர் அடுத்த காரம்பாக்கம், ராஜேஸ்வரி நகர் 2வது தெருள்ள ஒரு வீட்டை மப்டியில் போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் வந்து செல்வது தெரியவந்தது.

இறுதியில் அங்கு மஜாவாகப் பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. இதனையடுத்து அதிரடியாக வீட்டில் நுழைந்த போலீசார் பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி கல்லா கட்டி வந்த காரம்பாக்கத்தை சேர்ந்த கஸ்தூரி(53) என்ற பெண்ணைக் கைது செய்தனர். மேலும் அங்குப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 3 இளம் பெண்கள் மீட்கப்பட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட கஸ்தூரியிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகின.

சென்னையில் நல்ல சம்பளத்திற்கு என விளம்பரம் கொடுத்துப் பெண்களுக்குத் தூண்டில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. வேலை தேடி வரும் பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.

அவரிடம் இருந்த செல்போனை கைப்பற்றி அதில் இருந்த செல்போன் எண்களை ஆய்வு மேற்கொண்டதில் கஸ்தூரியுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு போலீசார் ஆப்பு வைத்துள்ளனர். பின்னர் பெண் பாலியல் புரோக்கர் கஸ்தூரியை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திப் புழல் சிறையில் அடைத்தனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *