Asia cricket match : இலங்கை அணியை வீழ்த்திப் பாகிஸ்தான் வெற்றி

ஆசிய கோப்பை தொடர் கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணியை வீழ்த்திப் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில், உள்ள அபுதாபியில் 17 ஆவது ஆசிய கோப்பை தொடர் கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றின் 3 ஆவது ஆட்டம் நடைபெற்றது.

இதில், இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த நிலையில், இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

பின்னர், ஆட்டத்தின் 2 ஆவது பந்தில் குசால் மெண்டிஸ் டக் அவுட்டான நிலையில், பதும் நிசங்கா 8 ரன்னிலும், குசால் பெரேரா 15 ரன்னிலும், சரித் அசலங்கா 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து, டாசன் ஷனகா முதல் பந்தில் டக் அவுட்டானார். இதையடுத்து, ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கமிந்து மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்து அவுட்டானார். இந்நிலையில், 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியப் பாகிஸ்தான் 18 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *