Papri Ghosh: படுக்கைக்கு அழைத்தால் முத்தம் கொடுப்பேன்!

பட வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைத்தால், அவருக்கு முத்தம் கொடுத்துச் சிக்க வைப்பேன் என, அதிர்ச்சி கொடுத்துள்ளார் பாப்ரி கோஷ்.

நடிகையும், மாடலுமான பாப்ரி கோஷ், கடந்த 2009-ஆம் ஆண்டு பெங்காலி மொழியில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு மொழியில் அறிமுகமான பாப்ரி கோஷுக்கு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இயக்குனர் SAC இயக்கி நடித்த டூரிங் டாக்கீஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பாப்ரி கோஷ், பின்னர் ஓய், சக்க போடு போடு ராஜா, பைரவா, விஸ்வாசம் போன்ற படங்களில் குட்டி குட்டி ரோல்களில் நடித்தார்.

எதிர்பார்த்த அளவுக்கு வெள்ளித்திரை இவருக்குக் கைக்கொடுக்கவில்லை என்றாலும், சின்னத்திரை பாபரி கோஷை மிகவும் பிரபலமாக்கியது. 2018-ஆம் ஆண்டு நாயகி சீரியலில் இரண்டாவது லீடு ரோலில் நடித்த இவர், பின்னர் பாண்டவர் இல்லை சீரியலில் நடித்தார்.

தற்போது சுந்தரி மற்றும் கண்ணெதிரே தோன்றினால் ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார்.  சமீபத்தில் இவர் அளித்த பேட்டியொன்றில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் வாய்ப்புக்காக நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேள்வி எழுபட்டது.

இதற்குப் பதில் அளித்த பாப்ரி கோஷ், அட்ஜஸ்ட்மென்ட் பண்ண தான் பட வாய்ப்பு என்று சொன்னால் அவரிடம் அட்ஜஸ்மென்ட் செய்யமாட்டேன் எனச் சொல்லமாட்டேன். என்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்யச் சொன்ன நபரின் வீட்டிற்கு சென்று, அவரது குடும்பத்தார் முன்பே அவருக்கு முத்தம் கொடுப்பேன். அப்போது வீட்டில் ஏன் இப்படி பண்ண? என்று கேட்பார்கள்.

அப்போது எனக்குப் பட வாய்ப்பு தாரேன், ஆனால் என்னோடு அட்ஜஸ்ட்மென்ட் செய்துகொள்…  என்று கூறினார். அதனால் தான் முத்தம் கொடுத்தேன் எனக் கூறுவேன். பின்னர் அந்த நபரை… அவரின் குடும்பத்தினரே நல்லா கவனித்து கொள்வார்கள் எனக் கூறி ஷாக் கொடுத்துள்ளார் பாப்ரி கோஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *