
26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கடலூரில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் காலதாமதமின்றி நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கும் தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கும் நியாயமான ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மாவட்ட மற்றும் மாநில தேர்வாணைக்குழு மூலம் தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் சொந்த ஊர் அருகாமையில் உள்ள சங்கங்களுக்கு இடம் மாறுதல் செய்யும் நடைமுறையை எளிமையாக உருவாக்க வேண்டும்,
விற்பனையாளர்களுக்கு அங்காடி பணிகளைத் தவிர வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்குதல் வருவாய் துறையினர் செய்ய வேண்டிய இலவச வேட்டி சேலை வழங்கும் கூடுதல் பணி சுமை வழங்குவதை கைவிட வேண்டும் போன்ற 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


