தொடர்ந்து தங்கம் விலை உயர்வு!

சென்னை:

தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் ‘கிடுகிடு’வென உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.

ரூ.60 ஆயிரத்தை தொட்டுவிடுமோ? என்று நினைத்ததெல்லாம் மாறி இப்போது ரூ.65 ஆயிரத்தையும் தொட்டுவிடுமோ? என நினைக்க வைத்துவிட்டது.

அந்த அளவுக்கு அதன் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த 1-ந்தேதி, தங்கத்தின் விலை வரலாறு காணாத ஒரு புதிய உச்சத்தை எட்டியது.

அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 790-க்கும், ஒரு சவரன் ரூ.62 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.95 உயர்ந்து, ரூ.7 ஆயிரத்து 905-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.760 உயர்ந்து ரூ.63 ஆயிரத்து 240-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,930-க்கும் சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,440-க்கும் விற்பனையாகிறது.

இந்த வாரத் தொடக்கத்திலிருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *