
கோவை மாநகராட்சி 45 வது வார்டு பகுதியில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட முகாம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாகக் கோவை மாநகராட்சி 45 வார்டுக்கு உட்பட்ட சாய்பாபாகாலனி ,கே.கே.புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில் 45 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பேபி சுதா ரவி முகாமை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், சாய்பாபாகாலனி பகுதி கழக செயலாளர் கே.எம்.ரவி, பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் செந்தில் குமார், வட்ட செயலாளர் கண்ணன், மற்றும் நிர்வாகிகள் நவாப், சீனி, பாஷா பாய், பத்மநாபன், மாரமுத்து, முரளி, சந்தோஷ், சுப்ரமணி, மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், ஜெனி சேகர், மகளிர் அணி சித்ரா, சாய்தா, சத்யா, அஜிதா, பிரியா எனப் பலர் கலந்து கொண்டனர்.
சாய்பாபாகாலனி பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த, மக்கள் நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாகக் கட்டணம் இல்லாமல் பெற ஏதுவாக இந்தக் காப்பீட்டு திட்ட முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என மாமன்ற உறுப்பினர் பேபி சுதா ரவி தெரிவித்தார்.



