Minister S. S. Sivasankar: அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட 7000 பேருந்துகள் விரைவில் மாற்றப்படும்!

அதிமுக ஆட்சி காலத்தில் வாங்கப்பட்ட 7000 டப்பா பேருந்துகள் விரைவில் மாற்றப்படும் என்று திருத்தணியில் ரூ. 2.42 கோட் கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகத்தைத் திறந்து வைத்த அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ரூ.2.42 கோடி மதிப்பீட்டில் 1.15 ஏக்கர் பரப்பளவில் புதிதாகக் கட்டப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகத்தைப் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர்:15 ஆயிரம் பேருந்துகள் கலைஞரின் ஆட்சியில் வாங்கப்ட்டன.ஜெயலலிதா முதல்வராக இருந்த போது10ஆயிரம்பேருந்துகள்வாங்கியதாகவும்  அதற்குப் பின் ஆட்சிக்கு வந்த ஓபிஎஸ், இபிஎஸ் 3600 பேருந்துகள் வாங்கினர். திமுக ஆட்சிக்கு வந்ததும்
விரைவில் 4000பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு 100  பேருந்துகள் சென்னையிலும் 150 பேருந்துகள்  அடுத்த கட்டமாகப் பிற மாவட்டங்களில் விடப்பட்டன.

3000புதிய பேருந்துகள் வாங்க நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டது போல  வாங்கப்பட உள்ளது. அதிமுக ஆட்சியாளர்களால் கடந்த ஆட்சிகாலத்தில் வாங்கப்பட்ட 7000 டப்பா பேருந்துகள் விரைவில் மாற்றப்படும்.

கூடுதலாகப் பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்து துறை அமைச்சர் சிவ சங்கர் தெரிவித்தார்.தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனத்தை  அமைச்சர் காந்தி மற்றும் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *