தமிழ்நாடு புதிய டி.ஜி.பி.யாக, பொறுப்பேற்றார் வெங்கடராமன்!

Advertisements

தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநராகவும், சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருந்த சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து, டி.ஜி.பி. பொறுப்புகளை வெங்கடராமனிடம் வழங்க, கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய டி.ஜி.பி.யாக வெங்கடராமன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக காவல்துறையின் தலைமைப் பிரிவின் டி.ஜி.பி.யாக இருந்த வினீத்தேவ்-வான்கடே, காவலர் வீட்டு வசதி கழகத்தின் டி.ஜி.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது பொறுப்பை ஜி. வெங்கட்ராமன் கூடுதலாகக் கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும். 1994- ஆம் ஆண்டு தமிழ்நாடு ஐ.பி.எஸ். பேட்ச் அதிகாரியான ஜி.வெங்கட்ராமன், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், பொருளாதாரம், பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்றும், ஏ.டி.ஜி.பி.யாகவும், சி.பி.சி.ஐ.டி. பிரிவிலும், மற்றும் சைபர் கிரைம் உள்ளிட்ட பிரிவுகளிலும், பணியாற்றி, பல முக்கிய வழக்குகளைக் கையாண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநராகவும், சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருந்த சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, டி.ஜி.பி. பொறுப்புகளை வெங்கடராமனிடம் வழங்க, கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய டி.ஜி.பி.யாக வெங்கடராமன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *