டிரம்பை ஓரங்கட்டும் இஸ்ரேல்… கடும் ஆத்திரத்தில் அமெரிக்கா..!

Advertisements
இஸ்ரேல் தெற்கு லெபனானில் இருந்து வெளியேற மாட்டோம் என்றும்,  அமெரிக்கா கேட்டாலும் கூட தங்களின் நிலையை மாற்ற மாட்டோம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த அறிவிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-ன் அதிகாரம் இஸ்ரேலிடம் எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதேபோல் இஸ்ரேலின் இந்த நிலைப்பாடு அமெரிக்கா – இஸ்ரேல் மத்தியிலான 60 நாள் கூட்டம் தடைப்படவும் வாய்ப்புள்ளது.
அமெரிக்கா கோரினாலும் கூட, தாங்கள் அதைக் கேட்க மாட்டோம் என்று அவர் திட்டவட்டமாக கூறியதால்  அமெரிக்கா – இஸ்ரேல் மத்தியிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைத் தலைவர் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கையிலும், இஸ்ரேல் படைகள் லெபனானில் தீர்க்கமாக செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, தெற்கு லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய “போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ளது” என்ற கருத்துக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது. தற்போது இஸ்ரேல் தெற்கு லெபனானில் தொடர்ந்து குண்டு வீச்சு நடத்தி வருகிறது. கடந்த சில மணி நேரங்களாக பெய்ரூத் நகருக்கு மேலே இஸ்ரேல் ட்ரோன்கள் பறந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் லெபனானின் தெற்கு பகுதிகளில் பதற்றம் தொடர்கிறது. இஸ்ரேல் படைகள் லெபனானில் தொடர்ந்து செயல்படும் என்று இஸ்ரேல் தலைமை தெரிவித்துள்ள நிலையில், அங்கு போர் நிறுத்தம் நடைமுறையில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இது அமெரிக்கா – ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு லெபனான் ஏன் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் முக்கியம் என்று கேட்டால் தெற்கு லெபனான், இஸ்ரேலின் வடக்கு எல்லையை ஒட்டிய பகுதி. அங்கு ஹெஸ்புல்லா அமைப்பின் செல்வாக்கு அதிகமாக உள்ளது.
ஹெஸ்புல்லா தாக்குதல்கள் இஸ்ரேலின் வடக்கு நகரங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாக இஸ்ரேல் கருதுகிறது.அதனால், எல்லைப் பாதுகாப்பிற்காக தெற்கு லெபனானில் ராணுவ இருப்பைத் தொடர விரும்புகிறது. அமெரிக்காவுக்கு  ஏன் முக்கியம் என்றால் அமெரிக்கா, மத்திய கிழக்கில் பெரிய போர் வெடிக்காமல் இருப்பதை விரும்புகிறது. இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் நீடித்தால், ஈரான் மற்றும் அதன் கூட்டணி அமைப்புகளும் நேரடியாக ஈடுபடும் அபாயம் உள்ளது.
இது எண்ணெய் விலை, உலக வர்த்தகம் மற்றும் பிராந்திய பாதுகாப்பை பாதிக்கக்கூடும். எனவே, போர் நிறுத்தம் மற்றும் அரசியல் தீர்வை அமெரிக்கா ஆதரிக்கிறது. ஏன் சர்ச்சை என்று கேட்டால் இஸ்ரேல்: “பாதுகாப்புக்காக அங்கு இருக்க வேண்டும்” என்கிறது.
அமெரிக்கா: “நீண்டகால அமைதிக்காக பதற்றத்தை குறைக்க வேண்டும்” என்கிறது.இதனால் இரு நாடுகளின் அணுகுமுறையில் சில நேரங்களில் கருத்து வேறுபாடு வெடித்திருக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கு இடையிலான சண்டை நிறுத்தம் நடைமுறையில் உள்ளது என்றும், தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுவிட்டன என்றும் கூறியிருந்தார். ஆனால் இஸ்ரேல் தரப்பின் அறிவிப்புகள் இதற்கு முழு முரணாக உள்ளன. இதேபோல் அமெரிக்காவில் இரு நாட்டு தலைவர்களும் சந்திக்க உள்ளனர். இஸ்ரேல் தெற்கு லெபனானை விட்டு வெளியேறாது என்று உறுதியாக இருப்பதால், அமெரிக்காவின் மத்தியஸ்த முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது மீண்டும் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
மேலும், அமெரிக்காவும் ஈரானும் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான வாய்ப்புகளும் தற்போது மங்கியுள்ளன. அமெரிக்காவின் அழுத்தத்தையும் மீறி இஸ்ரேல் தெற்கு லெபனானில் தொடர்ந்து இருக்கும் என்று அறிவித்துள்ளது, அமெரிக்கா-இஸ்ரேல் உறவில் புதிய பதற்றத்தை உருவாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்ட இந்த வாய் தகராறு போருக்கு வழி வகுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்பகலாம்..
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *