3 மணிநேரம் சிலம்பம் சுற்றி மாணவர்கள் சாதனை!

Advertisements

நாகப்பட்டினம்:

உலக சிலம்பம் விளையாட்டுச் சங்கம் மற்றும் நாகை வீர தமிழன் சிலம்பம் கலைக்கூடம் சார்பாக நாகை அடுத்த பாப்பா கோவில் தனியார் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நாகை, வேலூர், திருச்சி, தஞ்சை, சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களிலிருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தொடர்ந்து இடைவிடாமல் 3 மணி நேரம் சிலம்பம் சுற்றினர். அப்போது அவர்கள் சிலம்ப கம்பில் எல்.இ.டி. விளக்கு பொருத்தி சிலம்பம் சுற்றினர்.

நாகை வீர தமிழன் சிலம்ப கலைக்கூடத்தின் ஆசான் சரவணன் கூறும்போது, போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்களைப் பங்கு பெற செய்ததற்கான முக்கிய காரணம் இன்றைய மாணவர்கள் நாளைய சமுதாயம் போதையில்லா சமுதாயம் உருவாகிடவும், போதையினால் ஏற்படும் தீமைகளை மாணவர் பருவத்திலேயே அவர்களுக்கு விதைப்பதன் மூலம் அதன் தீமைகளைக் குறித்து அவர்கள் அறிந்து கொள்வதோடு சமுதாயத்திற்கும் எடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையோடு இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகத் திரைப்பட நடிகர் கிங்காங் பங்கு பெற்று மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

இடைவிடாமல் 3 மணி நேரம் நடைபெற்ற போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை வேர்ல்ட் ஸ்டார் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு அசோசியேஷன் செகரட்டரி பிரபாகரன் நேரில் பார்வையிட்டுப் பதிவு செய்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *