முதல்வர் விஜயை வாழ்த்தி பேசிய வைகோ.. அதிர்ச்சியில் மூத்த தலைவர்கள்.!

Advertisements
தமிழக முதலமைச்சர் விஜய் சிறப்பாக செயல்படுகிறார் அவரது பேச்சில் கருத்தும் இருக்கிறது காரமும் இருக்கிறது. இன்னும் ஒரு ஆறு மாதத்திற்குள் தன்னை முழுமையாக ஆயத்தப்படுத்தி கொள்வார் நான் அதை நம்புகிறேன் என்று அருப்புக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார்..
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவேரி மஹால் திருமண மண்டபத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மாவட்ட மாணவரணி செயலாளர் திருமண விழாவை மதிமுக பொது செயலாளர் வைகோ நடத்தி வைத்தார்.  அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைகோ,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் கூட்டம் நாளை காலை 10 மணி அளவில் தாயகத்தில் நடைபெற உள்ளது தற்கால அரசியல் சூழ்நிலைகள் குறித்து அங்கு விரிவாக விவாதிக்கப்படும். அங்கு விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் முடிவுகள் பொதுக்குழு உறுப்பினர்களின் முன்னிலையில் முன்வைக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து பொதுக் குழு உறுப்பினர்களின் எண்ணத்தை அறிந்து கழகத்தின் தீர்மானங்கள் வடித்தெடுக்கப்படும் என பேசினார் .. தற்போதைய சூழலில் தமிழக வெற்றி கழகம் திமுக இடையே அரசியல் முதல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,
தமிழக முதலமைச்சர் விஜய் சிறப்பாக செயல்படுகிறார் அவரது பேச்சில் கருத்தும் இருக்கிறது காரமும் இருக்கிறது.
இன்னும் ஒரு ஆறு மாதத்திற்குள் தன்னை முழுமையாக ஆயத்தப்படுத்திக் கொள்வார் நான் அதை நம்புகிறேன் என பேசினார் .. சட்டசபையில் பார்டி பண்ட் வாங்கி ஊழல் நடந்துள்ளது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது அது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என கூறினார்.
வரக்கூடிய தேர்தலில் தொடர்ந்து திமுகவுடன் பயணிப்பீர்களா இல்லை தவெக உடன் கூட்டணி அமைப்பீர்களா என செய்தியாளர் கேட்டதற்கு, அது குறித்து வரும் 27ஆம் தேதி பிற்பகல் 4 மணி அளவில் உங்கள் எல்லோருக்கும் தெரிவிக்கப்படும் என பேசினார் . இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் ஜெகதீஸ்வரி எனக்கு பல மிரட்டல்கள் வருகிறது என பேசியுள்ளார் அதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,
எனக்கு எதுவும் தெரியாது பாதிக்கப்பட்டவர் அப்படி நினைத்தால் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கலாம் என பேசினார் மேலும் சட்டசபை நிகழ்வுகள் குறித்தும் எந்த கருத்தும் நான் தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்தார்…
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *