சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தல்.!

Advertisements

சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என  செவப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,  நாளை முதல் தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது முற்றிலும் ஏற்க முடியாதது என்றும்,  ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வு, அவசியப் பொருட்கள் விலை ஏற்றம் போன்றவைகளால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும், இந்த நிலையில் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவது மக்களின் வாழ்வை மேலும் சிரமப்படுத்துவதாகும் என்றும் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

மேலும், சாலைகளில் தரமற்ற பணிகள், பராமரிப்பு குறைபாடு, நீண்ட காலமாக முடிக்கப்படாமல் உள்ள பாலங்கள் மற்றும் சேவைச் சாலைகள் போன்ற பிரச்சனைகளை, சரி செய்ய மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மக்கள் செலுத்திய கட்டணத்திற்கே உரிய வசதி கிடைக்காமல் இருக்கும் நிலையில், கட்டணத்தை மேலும் உயர்த்துவது நேரடியாக மக்களை சுரண்டும் செயலாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும். சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்துகிறோம் என்றும், திரும்பப்பெறவி;ல்லை என்றால்,  மக்கள் நலனுக்காக, தமிழ்நாட்டில் பரவலான ஜனநாயக போராட்டங்களை நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். என்றும் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *