எ.வ. வேலுவுக்கு எமகண்டம் ஸ்டார்ட் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி.!

Advertisements

1972ல் அதிமுகவில் இணைந்து எல்எல்ஏ வாகிய பின்னர் 1997ல் திமுகவில் இணைந்தார். 2001 முதல் 2021 வரை சட்டமன்ற உறுப்பினராக மக்களுக்கு பணியாற்றிய இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக தற்போது ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் தமிழக வெற்றிக் கழக அரசு இவர் மீது அதிரடி நடவடிக்கயை எடுத்திருக்கிறது. அது என்ன நடவடிக்கைனா லஞ்ச ஒழிப்புத் துறையை அவரது வீட்டிற்கு ஏவி விட்டிருக்கிறது.

இதனை கேட்டு அதிர்ச்சியுற்ற  தீயசக்தி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது உள்ளத்தில் உள்ள காட்டத்தை தனது சமூக வலைதளப்  பக்கத்தில் பகிரங்கமாக வெளியிட்டிருக்கிறறார். அதில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தி வரும் நிலையில் அந்த பிரச்சினையை சட்டப்படி அவர் நிரூபிப்பார் என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எ.வ. வேலுக்கு  வக்காளத்து வாங்கிருக்கிறார்.

இதுகுறித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் – முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு அதாவது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார். அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், தவெக அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.

திமுக ஆட்சிக் காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே தமிழக அரசியலின் வரலாறு என்று சூளுரைத்திருக்கிறார். ஆளுங்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அச்சம் என்பது மடமையடா என்ற வரிகளைப்போல அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். அதற்கு பதிலடியெல்லாம் கொடுத்து  வந்திருக்கிறோம் என்றிருக்கிறார். இதையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்! இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் சென்னை, திருவண்ணாமலை பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு. இவர் திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளர், திமுக எம்எல்ஏக்களின் சட்டசபை கொறடாவாகவும் இருந்து வருகிறார்.

முன்னாள் முதல்வர் ஸ்டாலினுடன் நேற்று புதுவையில் எ.வ.வேலு இருந்த நிலையில் இன்று காலை எ.வ.வேலுவுக்குச் சொந்தமான சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திலும் திருவண்ணாமலை வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.
பொதுவாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் எஃப்ஐஆர் போட்டுவிட்டு இது போன்ற சோதனைகளில் ஈடுபடுவார்கள். ஆனால் எ.வ.வேலு வீட்டில் எதற்காக சோதனை நடைபெறுகிறது, எந்த வழக்கு, யார் புகார்தாரர் போன்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

எ.வ.வேலு சாலை பணிகள், கட்டிடம் கட்டும் பணிகளுக்கான அமைச்சராக இருந்ததால் அது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால் எ.வ. வேலுக்கு எமகண்டம் ஸ்டார்ட்  ஆயிட்டு என்கிறார்கள்  அரசியல் சாணக்கியர்கள்..

ஆக எ.வ. வேலு   தவெக எமனிடம் கையும் கழுவுமாக சிக்குவாரா அல்லது தலை தப்பித்துக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *