
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தனது 28 அம்ச போர் அமைதித் திட்டத்தை ஏற்க உக்ரைனுக்குக் கெடு விதித்துள்ளாா்.
உக்ரைன், ரஷ்யா இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகின்ற நிலையில், போரை நிறுத்துவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 28 அம்ச போர் அமைதித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
இந்த, திட்டத்தில் உக்ரைன் அரசு ஏற்கெனவே நிராகரித்திருந்த பல அம்சங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், டிரம்ப் விதித்துள்ள கெடு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, அதிபர் டிரம்ப் பேசியப் போது, போா் நிறுத்தம் தொடா்பான வரைவுத் திட்டத்தை உக்ரைன் வருகின்ற 27 ஆம் தேதிக்குள் ஏற்க வேண்டும், இல்லையென்றால் அந்த நாட்டுக்கு அமெரிக்கா அளித்துவரும் ஆதரவு நிறுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த, வரைவு திட்டம் ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு தரப்புக்குமே நன்மை பயக்கும். எனவே, இந்த திட்டத்தை உக்ரைன் அரசு ஏற்க வேண்டும். அதுதான், அமைதிக்கு வழிவகுக்கும் என்று டிரம்ப் வலியுறுத்தினாா்.


