Advertisements

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை 92 நாடுகளுக்கு சுற்று பயணம் சென்றிருக்கிறார். இந்த வகையில் 2500 கோடி ரூபாய் செலவாகி இருக்கிறது. இது குறித்து எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் . தற்பொழுது பாரத பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு சென்றுள்ளார் அங்குள்ள மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய நிலையில் இதுவரை அவர் 92 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதாக தெரிகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதன்முதலாக அவர் தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்கினார் அவர் முதலில் சென்றது பூட்டான் நாட்டுக்கு இதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு பிரேசில் நேபாளம் ஜப்பான் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சென்றார். 2015 ஆம் ஆண்டு பிரான்ஸ் சிகாகோ உள்பட பல வெளிநாடுகளுக்கு சென்றார் . கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அவர் வெளிநாடு சென்ற வகையில் 2 ஆயிரத்து140 கோடி ரூபாய் செலவாகி இருக்கிறது .
இதே போல் கடந்த 2001 முதல் 2024 வரை அவர் வெளிநாடு சென்ற வகையில் 365 கோடி ரூபாய் செலவாகி இருக்கிறது . ஆக மொத்தத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை அவரது வெளிநாட்டுச் செலவு 2500 கோடி ரூபாயை எட்டுகிறது .
பிரதமர் மோடி அரசியலுக்கு வருவதற்கு முன்பாக அவரது சொத்து பணம் என்றால் ஒரு சின்ன கைப்பை தான் அந்த கைப்பையில் ஒரே ஒரு சட்டை ஒரு வேஸ்டி இருக்கும் அவர் உடுத்தியிருந்த இந்த ஆடையை தவிர மற்றொரு ஆடையை அவ்வப்போது சலவை செய்து அணிந்து கொள்வார்.
அவர் இமயமலையில் வாழ்ந்த காலங்களில் உணவுக்கே கஷ்டப்பட்டவர் என்பது கால வரலாறு . இப்பொழுது பிரதமர் ஆன பிறகு அவர் 92 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார் கிட்டத்தட்ட அவர் வெளிநாடு செல்லாத முக்கிய நாடு என்று எதுவும் இல்லை . தற்பொழுது அவரது வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements



