கம்பி கட்டும் கதையெல்லாம் உருட்டுபவர் தான் டி.ஆர்.பி. ராஜா என்று அதிமுக விமர்சனம்.!!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றிப் பேசும் இந்த அமைச்சர்கள் யாரென்று பார்த்தால், ஒருவர் ஒட்டுண்ணி ரகுபதி இன்னொருவர் கம்பி கட்டும் கதையெல்லாம் உருட்டுபவர் டி.ஆர்.பி. ராஜா என்று அதிமுக தொழில்நுட்ப பிரிவு சமூக வலைத்தளத்தில் விமர்சித்துள்ளது.

அதிமுக தொழில்நுட்ப பிரிவின் சமூக வலைத்தளப் பதிவில், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றிப் பேசும் இந்த அமைச்சர்கள் யாரென்று பார்த்தால், ஒருவர் ஒட்டுண்ணி ரகுபதி இன்னொருவர் கம்பி கட்டும் கதையெல்லாம் உருட்டுபவர் டி.ஆர்.பி. ராஜா என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு செய்ததாகச் சொல்வது எல்லாமே, அதிமுக திட்டங்களின் சீப் காபி தான் என்றும், மக்கள் நலத் திட்டங்களுக்கு எப்போதுமே சொந்தக்காரங்க நாங்க தான் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு வாக்குறுதி அளித்தால், அது செயலில் நடக்கும் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்பது திமுகவினருக்கே தெரியும்.

அதனால் தான் இவ்வளவு வயிற்றெச்சல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *