
காஞ்சிபுரத்தில் வீட்டின் வெளியே சென்று கொண்டிருந்த சிறுமியை மாடு முட்டியதில் 4 வயது சிறுமி படுகாயமடைந்தாள், காஞ்சிபுரம் மாநகராட்சியில் தொடர்ந்து மாடு முட்டிப் பொதுமக்களுக்குக் காயம் ஏற்படுவது தொடர்கதை ஆகிவருவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 32 வது வார்டு அஷ்டமிஜப் பெருமாள் கோவில்பின் தெருவில் வசிக்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பேருந்து நடத்துனர் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி தனியார் வங்கியில் பணியாற்றி அப்பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் இவர்களின் 4 வயது சிறுமி தனனியா வீட்டின் வெளியே சாலையை நின்று கொண்டிருந்தபொழுது அவ்வழியே சிறுமி இருப்பதை கண்ட பசு மாடு ஒன்று வேகமாகச் சிறுமியை முட்டித் தள்ளி உள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுத் தாய் ஓடிவந்து மாடு இடம் இருந்த குழந்தையை மீட்டு மாடை விரட்டி விட்டுள்ளனர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
தொடர்ந்து பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளும் சாலையிலும் மாடு உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்று விபத்துகள் ஏற்படுத்தியும் சாலையில் நடந்து செல்பவர்களை இடித்துக் காயம் ஏற்பட்டு உயிர் பலி உண்டாகும் நிலை தொடர்ந்து வருவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.


