Pudukkottai : ஆலங்குடி அருகே களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி.!

மாயன் பெருமாள் கோவில் திடலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியினை அமைச்சர் மெய்யநாதன் உறுதிமொழி ஏற்று, கொடியசைத்து தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மாயன் பெருமாள் கோவில் திடலில் தமிழர் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இந்தப், போட்டியினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் உறுதிமொழி ஏற்று, கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து, போட்டியில் 650 காளைகளும் 300 காளையர்களும் பங்கேற்றனர்.

பின்னர், போட்டியில் சிறந்த முறையில் காளைகளைத் தழுவியக் காளையர்களுக்கும் நீண்ட நேரம் வீரர்களை திணறடித்த களமாடு உரிமையாளர்களுக்கும் இருசக்கர வாகனம், LED டிவி உள்ளிட்ட பல்வேறு விதமான பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி ஆலங்ககுடி காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *