ஐக்கிய அரபு அமீரக அதிபர் இந்தியா வருகை..!

இந்தியா வந்துள்ள ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமதுவை, பிரதமர் நரேந்திரமோடி விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார். தலைநகர் டெல்லி வந்த, ஐக்கிய அரபு அமீரக  அதிபர் ஷேக் முகமதுவை, பிரதமர் நரேந்திரமோடி விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார். அதன்பின்னர் அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஷேக் முகமதுவை, பிரதமர் நரேந்திரமோடி காரில் அழைத்துக்கொண்டு, ஜனாதிபதி மாளிகை சென்றார். அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஷேக் முகமது சந்திக்கிறார். இதன் பின்னர், பிரதமர் நரேந்திரமோடியும், ஷேக் முகமதுவும் இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

இதையடுத்து, இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு, ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது இன்றே இந்தியாவிலிருந்து புறப்பட்டுச் செல்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *