“சுங்கக் கட்டணம் வசூலித்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும்” – ஸ்காட் பெசென்ட் எச்சரிக்கை!

ஹோர்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டண முறையைத் திணிக்கும் எந்தவொரு முயற்சியையும், அமெரிக்க அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது என்று அந்நாட்டு நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ஹோர்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டண முறையைத் திணிக்கும் எந்தவொரு முயற்சியையும், அமெரிக்க அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது என்று கூறினார்.
குறிப்பாக, இந்த நீரிணையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ துணைபோகும், எந்தவொரு தரப்பையும் அமெரிக்க நிதித்துறை தீவிரமாகக் குறிவைத்து நடவடிக்கை எடுக்கும் என்பதை, ஓமன் நாடு அறிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் வர்த்தகத்தின் சுதந்திரமான ஓட்டத்தை சீர்குலைக்க ஈரான் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் உலக நாடுகள் அனைத்தும் முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பிராந்தியத்தையும் உலகத்தையும் அச்சுறுத்தி வந்த தெஹ்ரானின் நாட்கள் முடிந்துவிட்டன என்று எச்சரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *