Advertisements

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் போட்டிக் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன்படி, செம்ஸ்போர்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய யஷ்திகா பாட்டியா 54 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 69 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக ஏமி ஜோன்ஸ் 67 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம், இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Advertisements





