
இன்று புனித வியாழன். நாளை புனித வெள்ளி. இயேசு சிலுவையில் உயிர்விட்ட தினம். அவரது திருப்பாடுகளைத் தியானித்து அனுசரிக்கிற தவக்காலத்தின் கடைசி வாரத்தில் மிகப் புனிதமான நாள். இயேசு கைது செய்யப்படுவதற்கு முதல்நாள், தன் சீடர்களுடன் பாஸ்கா பண்டிகையின் இரவு உணவை உண்கிறார்.

அப்போது கடவுளாகிய தன் தந்தை விரும்பியபடி தன் உயிரையும் ரத்தத்தையும் பலியாகக் கொடுக்கப் போவதை குறிப்பால் உணர்த்தினார். ரொட்டியையும் திராட்சை ரசத்தையும் தன் சீடர்களுக்கு உணவாகக் கொடுத்து, அவை தனது உடலும் ரத்தமுமாகக் கொள்ளப்படவேண்டிய அடையாளம் என்றும் அதைத் தன் நினைவாகத் தொடர்ந்து நிறைவேற்றும்படியும் சீடர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன் அவருடைய 12 சீடர்களுடன் சேர்ந்து உணவு உண்டார் என்றும், ஒருவரையொருவர் அன்பு செய்து வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக சீடர்களின் பாதங்களை கழுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது . ஆகவே தவக்காலத்தின் கடைசி வாரத்தில் வரக்கூடிய வியாழனை பெரிய வியாழனாக கிறிஸ்துவ மக்கள் அனுசரிகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது .


