
ஈரானை சரணடைய நினைக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் திட்டம் முறியடிக்கப்படும் என ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் அந்நாட்டின் உள்ள தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்தார். அப்போது, ஈரான் தனது எதிரிகளின் வஞ்சகத் திட்டத்தை முறியடிக்கும் என்று கூறினார். கடற்படை முற்றுகை மூலம் ஈரானைச் சரணடையச் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதன் பின்னர், கடந்த இரண்டு மாதங்களாக நாட்டு மக்கள் காட்டிய மன உறுதியைப் பாராட்டினார். எதிரிகள், கடற்படை முற்றுகை மற்றும் ஊடக கையாளுதல் மூலம் பொருளாதார அழுத்தத்தையும் உள்நாட்டுப் பூசல்களையும் தூண்டி, பலவீனப்படுத்த விரும்புவதாகக் கூறினார்.
ஈரான் ஒரு உடன்பாட்டிற்கு வரும் வரை அந்த முற்றுகை நீடிக்கும் என்று கூறும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரின் திட்டம் கட்டாயப்படுத்துவதே என்பது மிகவும் தெளிவாகியுள்ளது என்று தெரிவித்தார்.




