நாளை வெளியாகிறது நீட் தேர்வு ஹால்டிக்கெட் : டவுன்லோட் செய்வது எப்படி.?

Advertisements

நாடு முழுவதும் மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியாக உள்ளது.
நாடு முழுவதும் மருத்துவம், பல்மருத்துவம், சித்த மருத்துவம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு மே மூன்றாம் நாள் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வை எழுதத் தமிழ்நாட்டில் இரண்டு இலட்சம் மாணவ மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் 28 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஹால்டிக்கெட் நாளை வெளியிடப்படும் என்று நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.

தேசியத் தேர்வு முகமையின் இணையத்தளத்தில் ஹால்டிக்கெட் நாளை வெளியிடப்படும். தேர்வெழுத விண்ணப்பித்தவர்கள் இந்த இணையத்தளத்தில் ஹால்டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *