போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை-திடுக்கிடும் தகவல்..!

போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை மதுரவாயலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . போதைக்கு பயன்படுத்திய 76 மாத்திரைகள் மற்றும் ஏழு சிரஞ்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது . மதுரவாயலில் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மதுரவாயல் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்போது மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியின் பின்புறத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரிடம் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் சிரஞ்சிகள் இருப்பது தெரியவந்தது.
அந்த நபர் நெற்குன்றம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (23) என்பதும், வலி நிவாரண மாத்திரைகளை போதை பயன்பாட்டிற்காக இளைஞர்களுக்கு அவர் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 76 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஏழு சிரஞ்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *