ஐநா அணுஆயுத குழு தலைவர் போட்ட குண்டால் கதிகலங்கிய அமெரிக்கா..!

Advertisements

ஈரான் அணுஆயுதம் தயாரிக்கும் பணியில் மிகவும் நெருக்கமாக சென்றுவிட்டது. மோசமான அணு ஆயுதம் தயாரிப்பின் இறுதிக்கட்டத்தை ஈரான் எட்டிவிட்டது என்று ஐநா சபையின் அணுஆயுதம் கண்காணிப்பு குழுவினர் தலைவர் ரஃபேல் க்ரோஸி தெரிவித்து அமெரிக்காவை அலற வைத்துள்ளார்.அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் என்பது நடந்து வருகிறது. குறிப்பாக டொனால்ட் டிரம்ப் அதிபரானது ஈரானுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஈரானின் படைப்பிரிவில் வெளிநாட்டில் ஆபரேஷன்களை மேற்கொள்ளும் தளபதியை கொன்றார். இதனால் ஈரான் – டொனால்ட் டிரம்ப் தனிப்பட்ட பகை உணர்வு உள்ளது. போதா குறைக்கு கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இப்படியான சூழலில் தான் டொனால்ட் டிரம்பிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றால் அணுஆயுதம் வைத்திருக்க வேண்டும் என்று ஈரான் நம்புகிறது. ஏற்கனவே ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் டொனால்ட் டிரம்ப் வென்றதும் அதற்கான நடவடிக்கையை இன்னும் தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை டொனால்ட் டிரம்ப் விரும்பாத விலையில் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமேனிக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து ஈரான் – அமெரிக்கா இடையே முதற்கட்டமாக மஸ்கட்டில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.அவர் கூறியதில் : ‛‛ஈரான் அணுஆயுதம் தயாரிக்கும் பணியில் மிகவும் நெருக்கமாக சென்றுவிட்டது. அணுஆயுதம் தயாரிப்பதற்கான அனைத்தையும் அவர்கள் தனித்தனியாக தயாராக வைத்துள்ளனர். இன்னும் சில படிநிலைகள் மட்டுமே உள்ளது. விரைவில் அவர்கள் அதனை ஒன்றாக இணைத்தால் அணு ஆயுதம் உருவாகி விடும். இதனால் ஈரான் அணுஆயுதத்தை கையில் ஏந்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு நாட்டிடம் அணுஆயுதம் இல்லை என்று வாய்மொழியாக சொல்வதை நம்மால் நம்ப முடியாது. ஏனென்றால் அதனை நாம் சரிபார்க்க வேண்டும்” என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *