நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷண் விருது!

Advertisements

திரைத்துறையில் சிறந்த பங்களிப்பைச் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவித்து மத்திய அரசு கௌரவித்துள்ளது.

கலைத்துறையில் சிறந்த பங்களிப்பைச் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவித்து மத்திய அரசு கௌரவித்துள்ளது.

நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

இந்நிலையில் அஜித் உட்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்குப் பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

  • வர்த்தகம் மற்றும் தொழில்துறை பிரிவில் நல்லி குப்புசாமி செட்டிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  • கலைத்துறை பிரிவில் நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  • கலைத்துறை பிரிவில் நடிகை ஷோபனாவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  • கலைத்துறை பிரிவில் தாள வாத்திய கலைஞர் குருவாயூர் துரைக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  • பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  • இலக்கிய பிரிவில் லக்ஷ்மிபதி ராமசுப்பையருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  • அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் எம்.டி.சீனிவாஸுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  • விளையாட்டுத்துறையில் ரவிசந்திரன் அஸ்வினுக்கு பபத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  • கலைத்துறை பிரிவில் தெருக்கூத்து கலைஞர் பி.கே.சம்பந்தனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  • வர்த்தகம் தொழில்துறையில் ஆர்.ஜி.சந்திரமோகனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  • கலைத்துறை பிரிவில் ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  • இலக்கியம் மற்றும் கல்வி பிரிவில் சீனி விஸ்வநாதனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *