
தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது; என்று கரூர்-கோடங்கிபட்டியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தி.மு.க. சார்பில், அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி, பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி, மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து, முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டு திமுக முப்பெரும் விழா, கரூர் கோடங்கிபட்டியில் இன்று நடைபெற்று வருகிறது. விழாவில் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் நின்று உண்மையாக உழைக்கிறோம், தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமையும் என்றும், நாட்டிலேயே முதலில் ஆட்சியை பிடித்த மாநில கட்சி தி.மு.க என்றும், மிரட்டலுக்கு பயப்படும் கட்சி திமுக அல்ல என்றும், ஈராயிரம் ஆண்டுகளாக காவி கூட்டத்துடன் போராடி வருகிறோம் எனவும், தி.மு.க.விற்கு மாற்றம் என்றவர்கள் எல்லாம் மறைந்து போனார்கள் எனவும், தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.





