
தமிழ்நாட்டுக்கு வரும் மத்திய அமைச்சர்களும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களும் தமிழ்மண்ணில் நின்று, “மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவோம்” என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா? எனத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டுக்குத் தருவது எவ்வளவு? பா.ஜ.க.வால் ஆளப்படும் மாநிலங்களுக்குத் தருவது எவ்வளவு? என்று வெளிப்படையாக அறிவிக்க முடியுமா என்று வினவியுள்ளார்.
கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்காற்றுச் சட்டத்திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா? அல்லது நிறைவேற்றப் போகிறீர்களா? என்றும் வினவியுள்ளார்.


