மருத்துவமனையா? மரண வலையா? வேடிக்கை பார்க்கும் CMவிஜய்.!

Advertisements

ஒரு மனிதன் தூங்கி எழுந்து மீண்டும் பார்த்தால்தான் தெரியும், அவன் மண்ணுலகில் இருக்கிறானா அல்லது விண்ணுலகத்தில் கனவு காண்கிறானா என்று. அப்படி தற்போது பிறக்கும் குழந்தை கூட நோயோடு சேர்ந்து பிறக்கிறது. காரணம் மனிதன் இந்த மாய உலக வலையில் ஆடும் நாடகம்தான்.

விஞ்ஞான ரீதியிலே விண்ணைப் பிளக்கும் அளவுக்கு தொழில்நுட்பம். இதனால் மண்ணில் விளையும் விவசாயம் விஷமாக மாறி மனிதன் தின்றுவிட்டு ஆறு அடி மண்ணிற்கு விரைவிலே தன்னை அர்ப்பணித்துக்கொள்கிறான். அப்படி இந்த விஞ்ஞான உலகத்தில் மனிதன் ஆட்பட்டு அதனால் நோயும் வாய்ப்பட்டு இன்று மருத்துவமனையில் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறான்.

பணம் இருப்பவன் பால்கோவா தின்பான். பணம் இல்லாதவன் குச்சி ஐஸ் கூட திங்க முடியாத நிலையில் தன் குச்சி உடம்பை வைத்துக்கொண்டு அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கிறான்.கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்கே ஒரு குரங்கு சிங்குச்சான் சிங்குச்சான் ஆடியதான். அப்படி பணத்துக்கு வழியில்லாத பாமர மக்கள் அரசு மருத்துவமனைக்கு போனா அங்கு திக்கெத்தவனுக்கு திடுக்கினு கிடைச்சுசாம் மருத்துவமனையில் மிகப்பெரிய அதிர்ச்சி.

அரசியலோடு இதனை ஒப்பிட்டால் ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம். தப்பை சுட்டிக்காட்டினால் காலம் தன் கண்ணை குத்தும் என்பார்கள். இருப்பினும், அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தை மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

நம் தமிழ் கடவுள் முருகன் குடிகொண்டிருக்கும் குன்றத்தூருக்கு பொதுமக்கள் அதிகம் சென்றார்களோ தெரியவில்லை. ஆனால் குன்றத்தூரில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நடுத்தர மக்கள் போன்றவர்கள் கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் இருப்பதுபோல் அரசு மருத்துவமனையில் நாளுக்கு நாள் அதிகரித்து ஏராளமானோர் வருகின்றனர்.

கோவிலுக்கு போனால் கூட்ட நெரிசலில் பொதுமக்கள் சிக்கித் தவிப்பதுபோல் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சிக்கித் தவித்து வருகிறார்கள். காரணம்.இங்கு நோயாளிகளுக்கு போதுமான வசதிகள் உள்ளதா என பொதுமக்களிடம் கேட்டதற்கு மருத்துவம் எல்லாம் நன்றாக இருக்கின்றது. மருத்துவம் பார்க்கும் இடம்தான் நன்றாக இல்லை என்று பொதுமக்கள் வேதனையில் புலம்பி இருக்கின்றனர்.

ஏனென்றால் இங்கே ஆபத்தான நிலையில் உள்ளது. 10க்கு 10 வீடு கட்டுவதுபோல இங்கு 10+10 அடி ஆழமுள்ள குழி ஒன்று உள்ளது. மற்றும்…
காற்று அடித்தால் வானத்தில் பட்டம் போல் வட்டமிடும் தகடுகள் ஆங்காங்கே ஆபத்து தரக்கூடிய வகையில் உள்ளது. ஆஸ்துமா, புற்று, சர்க்கரை நோய் உள்ள ஏராளமான சகல நோயாளிகளும் இருக்கின்ற இந்த மருத்துவமனையில் மின்விசிறி அனைத்தும் நசுக்கப்பட்டு அபாய நிலையில், அதுவும் அங்குள்ள நோயாளியின் மேல் விழுந்தால் ஆள் அவுட் என்கின்ற அபாயகரமான முறையில் தொங்கிக்கொண்டு இருக்கிறது.

OP பிரிவு என்ற புறநோயாளிகள் பிரிவில் மருத்துவமனையின் உள் புறமும், சுற்றுப்புறமும் மக்களுக்கு சலிப்பையும், தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.ஏனெனில் எட்டாத உயரத்தில் வாழ்க்கையை இறைவன் வைக்காமல் இங்கு வாழ்க்கையை எளிதில் அவன் ஜோலியை முடிப்பதற்கு அனைத்து காத்திருப்பு பகுதி மின்சார கேபிள் மற்றும் மெயின் போர்டு கைகளில் தொடும் அளவில் உள்ளன. மருத்துவமனையின் சுற்றியுள்ள பகுதியில் ஒரு சில இடங்களில் தூய்மை இன்றி காணப்படுகின்றது.

தொட்டது முதல் அனைத்தும் கெட்டது என்பார்களே, அப்படி இந்த மருத்துவமனையில் தொட்டதும் அனைத்தும் ஆபத்தானவையே என்பதற்கு இன்னும் சில உதாரணங்கள்.கட்டிடத் திறப்பு பலகை மீது பைப்பிலிருந்து தண்ணீர் தொட்டபடி பாசை அடைந்து உள்ளது. ஊடுகதிர் அறையில் கைப்பிடி ஆரம்பித்து அங்கு உள்ள அனைத்து கைப்பிடி கம்பிகள் மற்றும் பொதுமக்கள் அமரும் நாற்காலி வரை ஆபத்தான நிலையில் துரு பிடித்து காணப்படுகின்றது.

கழுவி நீர் தொட்டி முறையாக மூடப்படவில்லை. இது மட்டுமின்றி கர்ப்பிணி பெண்கள் அவர்களின் முதல் பிறந்த குழந்தைகளை வெளியே விட்டு விட்டு விளையாடிக் கொண்டீர்கள் என கூறிவிட்டு மருத்துவரை சந்திக்க சென்று விடுகிறார்கள். குழந்தைகள் இவ்விடத்தில் ஆபத்து இருப்பது தெரியாமல் அவர்களும் ஆங்காங்கே விளையாடிக் கொண்டிருக்கின்றனர். குழந்தைகளுக்கு விளையாட்டு தெரியாது. ஆனால் அரசு மருத்துவமனை நிர்வாகத்துக்கும் கூடவா பிற உயிரில் விளையாடக் கூடாது என்று தெரியாது.

இவ்வளவு ஆபத்து நிறைந்த மருத்துவமனையில் அலட்சியம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை. ஓடுற வயதுள்ளவன் பாம்பை மிதிக்கலாம். ஆனால் ஓய்வெடுக்க வேண்டிய முதியவர், அங்குள்ள மின்விசிறியின் சுச்சை தெரியாமல் அழுத்தி விட்டார்.

அங்கு திடீரென சட்டத்துடன் மின் உயர் நுழைக்கப்பட்ட வைப்பில் மின்விசிறி அடித்துக்கொண்டே இருந்தது. அதைக் கண்ட பொதுமக்கள் சிறிது நேரம் அச்சம் அடைந்தனர். இதுபோல் ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன் இதை சரி செய்து தருமாறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூப்பாடு போட்டு கோரிக்கை வைக்கின்றனர்.

கோபுர மாளிகையிலே குடியிருக்கும் குமரனுக்கு குன்றத்தூர் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி இல்லை என்று குமறும் மக்களின் கண்ணீர் கதை தெரியவா போகிறது என்ன. அந்த குமரனுக்கும் உயிரிருந்தால் அவன், கஷ்டத்தை என்னிடம் பணத்தை கொட்டி புலம்புவதைவிட்டுவிட்டு, அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிக்கு கொண்டி சரி செய் என்றிருப்பான்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *