தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் இந்திய வீராங்கனை அஷ்மிதா டே.!

காமன்வெல்த் ஜூடோ பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை அஷ்மிதா டே வெற்றி பெற்று தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், மகளிருக்கான 48 கிலோ எடை ஜூடோ பிரிவு போட்டி நடைபெற்றது. இதில், இந்திய வீராங்கனை அஷ்மிதா டே, கனடாவின் ஹெய்டி குவாச் உடன் மோதினார். இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய அஷ்மிதா டே 2-1 என்ற கணக்கில் ஹெய்டி குவாச்சை வீழ்த்தினார்.
இதன்மூலம், அவர் வெற்றி பெற்று தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றிலேயே ஜூடோவில் இந்தியா பெறும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, காமன்வெல்த் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவு போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா சிறப்பாக விளையாடி,  85.83 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார். இதன்மூலம், அவர்  வெள்ளி பதக்கத்தை வென்றார்.
அதேவேளையில், யாஷ்வீர் சிங் தனது கடைசி முயற்சியில் 85.41 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
மேலும், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டும் 10 பிரிவு போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் மொத்தம் 7976 புள்ளிகளை பெற்றார்.
இதன்மூலம், தேஜஸ்வின் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *