ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிருக்கான கபடி இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.
ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிருக்கான கபடி இறுதிப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் ஈரான் மகளிர் அணிகள் மோதின. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 37-34 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தியது.
இதன்மூலம் இந்திய அணி வெற்றி பெற்று ஆசிய விளையாட்டு போட்டியில் மீண்டும் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.


