தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.!

தமிழகக் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இன்று மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

நாளை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக அரியலூர் மாவட்டம் செந்துறை, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஆகிய இடங்களில் 9 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *