உத்தரப்பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தின், பிப்ரி காவல் எல்லைக்குட்பட்ட மனோரி கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தயாரிப்பு ஆலையில் இன்று காலை சுமார் 11 மணியளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தீவிர சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர்கள், பிரயாக்ராஜில் உள்ள எஸ்.ஆர்.என் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருடன், அருகிலுள்ள மனோரி விமானப்படை தளத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்களும் இணைந்து, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். 1
0-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிபாடுகள் அகற்றும் பணி நடைபெறுகிறது. விபத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, உத்தரப்பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.




