
கடவுளின் ஆசியை வேண்டாம் என்று செல்பவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த வகையில் தேவி மகாலட்சுமியின் அருளைப் பெற அவரை வணங்கும் அனைவரும் பல விஷயங்களைக் கடைபிடித்து வாழ்கின்றனர். அவ்வளவு சிறப்பு மிக்க இந்த மகாலட்சுமி அருளை பெற்று செல்வம் சேர்க்க ஆண்கள் மற்றும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களைப் பார்க்கலாம்.
பெண்கள்:
ஒற்றை கால்களில் வீட்டில் அல்லது எந்த இடங்களிலும் நிற்காமல் இருப்பது, கை நிறைய வளையல்களை அணிந்து கொள்வது, தன்னுடைய கணவனின் கால்களைப் பிடித்து விடுவது, குங்குமத்தை மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் போன்ற இடங்களில் மோதிர விரலால் இடுவது, உண்ணும் உணவுகளை இடது கைகளால் பரிமாறாமல் இருப்பது, இடது கையால் பணம் அல்லது எந்தப் பொருள்கள்களையும் பெறாமல் இருப்பது மற்றும் கொடுப்பது போன்ற செயல்களைத் தவிர்ப்பது, இரவு போட்டிருந்த உடையுடன் காலை வீட்டின் படிகளைத் தாண்டி வெளியே செல்லாமல் குளித்து விட்டுச் செல்வது, கோவில்களில் அமர்ந்து தாலி கயிற்றை மாற்றிக் கொள்வது, அழுக்கான உடைகளை அணிவதை தவிர்ப்பது போன்ற செயல்களைப் பின்பற்றி வந்தால் பெண்கள் நல்ல செல்வ வளமுடன் வாழலாம்.
ஆண்கள்:
ஆண்கள் பணத்தை உடலின் முன்பக்கத்தில் அதாவது தொடை, மார்பகம் போன்ற இடங்களில் வைத்துக் கொள்வது, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் பெண்களிடம் அதாவது தாய், மனைவி போன்றவர்களிடம் சண்டை போடாமல் இருப்பது, பெண்களை வேதனைபடுத்தி அழவைப்பது போன்ற செயல்களைச் செய்யாமல் இருப்பது, பகலில் தாம்பத்தியம் கொள்வதை தவிர்ப்பது, பூக்களை மனைவிக்குச் சூட்டுவது, வெட்ட வெளியில் உறவு கொள்ளாமல் இருப்பது போன்ற செயல்களை ஆண்கள் பின்பற்றும்போது மகாலட்சுமியின் ஆசி கிடைக்கும் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன.
மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள்:
திருவிளக்கு, சந்தனம், வெற்றிலை, கோமியம், திருமால் மார்பு, பசுவின் பின்புறம், யானையின் தந்தம், தாமரை மலர், உள்ளங்கை, கன்னிப்பெண்கள், பசுமாட்டின் கால்தூசு, வேள்வி புகை, சங்கு, வில்வமரம் நெல்லி மரம், தர்ம சிந்தனை உடையாரின் உள்ளம், வெண்ணிற புறாக்கள் வாழும் இடம், கலகமில்லாத மகளிர் வாழும் இடம், தானியக் குவியல், கல்லும் உமியும் இல்லாத அரிசிக் குவியல், பணிவுடனும், நல்லசொற்களையும் பேசுபவர்கள், பகிர்ந்துண்டு வாழும் மனிதர்கள், தூய்மையான ஆடை அணிகிறவர்கள், நாவடக்கம் உள்ளவர்கள், மிதமாக உண்பவர்கள், பெண்களைத் தெய்வமாக நடத்துபவர்கள் போன்ற அனைத்து விஷயங்களும் மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்களாகச் சாஸ்திரங்களில் குறிபிடப்பட்டுள்ளது. ஆகவே தினமும் காலையில் மகாலட்சுமி வாசம் செய்யும் பொருளில் ஏதவாது ஒன்றை பார்த்து நன்மை பயக்கும் மேலும் செல்வதை தரும்.

