Exercise Leads to Death: உடற்பயிற்சி செய்த இளம் பெண் மரணம்!

உடல் எடையைக் குறைப்பதற்காக ஜிம்மில் தீவிர பயிற்சி மேற்கொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அன்விதா (24) எம்பிபிஎஸ் படித்து முடித்தார். பிரபல கண் மருத்துவரின் மகளான அன்விதா தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் உடல் எடையைக் குறைப்பதற்காகக் கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்திற்கு உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தார். வழக்கம்போலக் கடந்த புதன்கிழமை உடற்பயிற்சி மேற்கொண்ட சில நிமிடங்களிலேயே திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உடற்பயிற்சி மைய ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அன்விதாவை கொண்டு சென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அன்விதா மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 26 வயது பெண் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *