ஓணம் பண்டிகை உருவான விதம் மற்றும் அதன் வரலாறு..!

Advertisements
கேரள மக்கள் விரும்பி கொண்டாடும் பண்டிகை ஓணம்.திருவோணம் என்பது திருவோண நட்சத்திரத்தோடு கூடிய
 நன்னாளில் நோற்கும் நோன்பாகும். இந்த விரதம் பெருமாளுக்கு உகந்தது. ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன.இதில் பெருமாளுக்கு உகந்த திருவோணமும் ,சிவனுக்குரிய திருவாதிரை மட்டுமே “திரு” என்ற சிறப்பு அடைமொழி உடன் கூடியது.
தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்தபெருமாள்மாவலிசக்கரவர்த்தியிடம் மூன்றடி மண்கேட்டநிகழ்வு,திருவோண நட்சத்திரத்தன்று தான் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மாவலி சக்ரவர்த்திக்குமுத்திபேற்றினைவழங்கிய திருவோணத்தன்று மக்கள் வாழ்வில் அனைத்துநலமும்பெறவேண்டிபெருமளைநோக்கிவிரதம்இருந்துவழிபடுகின்றனர் .
சந்தோஷ வாழ்வு அருளும் திருவோண விரதத்தை கேரள மக்கள்ஓணம் பண்டியாகயாக கொண்டாடி மகிழ்கின்றனர் .கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகையை அனைத்து மக்களும் சாதி சமய பாகுபாடு இன்றி கொண்டாடுவது தனிச்சிறப்பாகும்.  ‘ காணம் விற்றாவது ஓணம் கொண்டாடு’ என்ற பழமொழி இந்த பண்டிகையின் பெருமையை பறைசாற்றுகிறது. தமிழ் மாதமான ஆவணி மாதத்தை கேரளாவில் சிங்கமாதம் என்று அழைப்பர்.
அந்த மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தன்று வளர்பிறையில் இந்த ஓணம் கொண்டாடப்படுகிறது . கிருஷ்ணன் நரகாசுரன் என்ற அசுரனை கொன்றபோது அவன் கேட்ட வரத்துக்கு ஏற்ப தீபாவளி கொண்டாடப்படுகிறது . அதைப்போல ஓணம் பண்டிகை தோன்றியதற்கும் ஒரு கதை உண்டு. தமிழகத்தில் நாகை மாவட்டத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யநகர் உள்ளது.
அகத்திய மாமுனிவருக்கு சிவபெருமான் தனது திருமண காட்சி காட்டிய அருளிய இடம்.  தேவார பாடல் பெற்ற தலம். இங்குள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஒருமுறை அர்த்தசாமபூஜை முடிந்து கதவு தாழிட்டபின் கருவறை விளக்கு அனணயும் தருவாயில் இருந்தது. அப்போது இறைவன் இத்திரியையார் தூண்டிவிடுகிறார்களோ அவர்களுக்கு மறுபிறவியில்அரச பிறவியும்  வீடுபேற்றையும்  என்றார் .
அப்போது விளக்கு எண்ணையை குடித்திடவந்த எலியின் மூக்குபட்டு தீபம் தூண்டப்பட்டது. அந்த எலியை பின்னாளில் மகாபலி மன்னராக  பிறக்கும்படி பேரருள் புரிந்தார்  சர்வேஸ்வரனிடம்வரம் பெற்ற  எலி மறுபிறவில் அசுர குலத்தில் பலி என்ற பேரில் பிறந்து மன்னராகி கேரளாவில் ஆட்சி செய்து வந்தார் அவரது ஆட்சி காலத்தில் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர் . தனது ஆற்றலாலும் தவ வலிமையாலும்  பலிமன்னர் தேவர்களை தோற்கடித்து மூவுலகங்களையும் வென்று  மகா சக்கரவர்த்தியானார் .
பின்னர் அவர் அசுவமேதயாகம் நடத்த தொடங்கினார் .இதை எதிர்பாராத தேவர்கள் அச்சுமுற்று ஸ்ரீமன் நாராயணனை சரணடைந்தனர்.தேவர்களின்வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மகாவிஷ்ணு வாமன அவதார ம்எடுத்து  மாவலி சக்கரவர்த்திமுன் தோன்றி மூன்றடி மண் வேண்டும் என யாசகம் கேட்டார். அதற்கு இசைந்த பலிமன்னன் நீரை வாத்து தானம் கொடுத்தார்.  யாசகம் கேட்டு வந்திருப்பது பகவானே என்பதை புரிந்து கொண்ட அசுரகுரு சுக்ராச்சாரியார் ஒரு  வண்டாக மாறி  கமண்டலத்துவாரத்தைஅடைத்தார்.
அதனால் சுக்ராச்சாரியார் ஒரு கண்ணை கிழக்கு நேரிட்டது பின்னர்  வாமனன் வானளாவவளர்ந்தார். ஓரடியால் சத்திய லோகத்தை அளந்து ஓங்கி உலகளந்த உத்தமன் ஆனார் . ஈரடியால் மண்ணையும் விண்ணையும் அளந்தார்.மூன்றாவது அடியை மாபலியின்  தலையில் தனது பொற்பாதத்தை வைத்து அவரை பாதாள லோகத்தில் அழுத்தி பேரருள் புரிந்தார். மாபலி பரந்தாமனிடம் ,பகவானே! நான் மிகப்பெரிய பேறுபெற்றேன் .அடியேன் பேறு பெற்ற இந்த திருநாளை எல்லா மக்களும் திருவிழாவாக கொண்டாட அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
அதற்கு பகவானும் அருள் புரிந்தார். மகாபலி பகவானுக்கு தானம் கொடுத்தது ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று நடந்தது அன்றைய தினம் மகாபலி மன்னன் மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காக பாதாள லோகத்தில் இருந்து கேரளாவுக்கு வருவதாக ஐதீகம்.இதை நினைவு கூறும் விதத்தில்ஒவ்வொரு ஆண்டும் ஓணம் திருநாள் கொண்டாடப்பட்டுவருகிறது.
மகாபலி மன்னன் வருகைக்காக இந்த திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அத்தம் என்று கூறப்படும் முதல் நாளில் இருந்து மகாபலி சக்கரவர்த்தியின் வருகைக்காக கேரள மக்கள் வீடுகள் தோறும் வாசலில் கோலமிட்டு  வண்ண பூக்களை வட்டமாக அடுக்கி வைத்த அலங்கரித்து மகிழ்வர் . அது அத்தப்பூகோலம்என்றுஅழைக்கப்படுகிறது . கேரளா முழுவதும் மகாபலி விஷ்ணு உருவங்கள் பெரிய அளவில் வரையப்படும்.
பத்தாவது நாளாக திருவோணம் தினம் கேரளாவில்உற்சாகமாக கொண்டாடப்படும். அன்றைய தினம் மக்கள் வீடுகளை அலங்கரித்து வைப்பர்.திருவிளக்கேற்றி வழிபடுவர். கும்மியடித்து மகிழ்வர். எல்லா கோவில்களிலும் சிறப்பான வழிபாடு நடைபெறும். குடும்பபெரியவர்கள் புத்தாடைகளை வழங்க,அதை குடும்பத்தில் உள்ளவர்கள்ன்பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கி பெற்று அணிந்து மகிழ்வர்.ஓணம் அன்று சிறப்பான உணவு வகைகளை சமைத்து உறவினர்களுடன் உண்டு மகிழ்வர்.
அன்று மாலை செண்டை என்று அழைக்கப்படும் கேரள பாரம்பரிய மேள தாளத்துடன் புலி ஆட்டம்,சிங்காரி மேளம்,கதகளி நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். படகுப்போட்டியும் நடைபெறும்.
ஓணம் விரதம் இருக்கும் பக்தர்கள் ஓணத்துக்கு முதல் நாள் இரவு உணவை தவிர்க்க வேண்டும். மகா விஷ்ணுவை வணங்கி துதிப்பாடல்கள் பாட வேண்டும் . சுவாமிக்கு நிவேதித்தப் பொருட்களை ஒரு பொழுது சாப்பிடலாம்.விரதம் இருக்க முடியாதவர்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.அன்று வீட்டில் நெய் விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பு பலன்களை தரும்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *