Gunshot: “மாடு மேய்க்க சண்டை”- 5 பேர் பலி!

Advertisements

மாடுகளை மேய்க்கும் உரிமை தொடர்பாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச்சூட்டில் 5பேர் கொல்லப்பட்டனர்…

போபால்: மத்தியப் பிரதேசத்தின், தாதியா மாவட்டத்தில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். தியா மாவட்டத்தின் ரெட்டா கிராமத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் இருதரப்பினரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டனர்.பின்னர் சம்பவ இடத்துக்குப் போலீசார் வந்ததும், துப்பாக்கிச் சூடு முடிவுக்கு வந்தது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் சம்பவம்குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ணையில் மாடுகளை மேய்க்கும் உரிமை தொடர்பாக இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மாநில உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ராவின் சொந்த மாவட்டம் தாதியா என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *