
காசியாபாத் பகுதியில் ஒருவர் கைகளில் வைத்து பட்டாசு வெடித்த போது, கை விரல்கள் துண்டாகிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது, ஒருவர் பட்டாசை கையில் பிடித்து வெடிக்க முற்பட்டார். அப்போது, அவர் திரியை கொளுத்திய சில விநாடிகளில் பட்டாசு வெடித்துச் சிதறியது.
இதில், அவரது விரல்கள் சிதறிப்போன நிலையில், வலியால் துடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


