Armstrong Murder: “சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் அல்ல – திருமாவளவன் அதிரடி!

Thiruma On Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங்கிற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும் என, திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

உரிய பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும் – திருமாவளவன்:

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட, ஆம்ஸ்ட்ராங்கின் உடலை நேரில் பார்த்து அஞ்சலி செலுத்தினார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், ”ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல. உண்மை குற்றவாளிகளைக் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். 8 பேர் சரணடைந்துவிட்டதால், புலன் விசாரணையைக் காவல்துறை முடித்துவிடக் கூடாது. ஆம்ஸ்ட்ராங் போன்றோருக்குக் காவல்துறை உரிய பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். கூலிப்படை கும்பலைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை பெற்றுத்தர வேண்டும். பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ்வாதி கட்சி அலுவலகத்திலேயே, ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்” எனத் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *