டிரம்ப் கனடாவை உடைக்க நினைப்பதாகக் கனடா பிரதமர் குற்றச்சாட்டு!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கனடாவை உடைக்க நினைப்பதாகக் கனடா பிரதமர் மார்க் கார்னி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கனடாவின் அண்டை நாடும் அதன் மிகப்பெரிய வணிகக் கூட்டாளியுமான அமெரிக்கா அண்மைக்காலமாகக் கனடா பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது. அது மட்டுமல்லாமல் கனடாவை 51ஆவது மாநிலமாக இணைத்துக்கொள்வோம் என்று டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் மக்களின் வலுவான ஆதரவைப் பெறத் தான் விரும்புவதாகவும், அதற்காக ஏப்ரல் 28ஆம் நாள் திடீர்த் தேர்தலை எதிர்கொள்வதாகவும் கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். கனடாவின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் வலுப்படுத்துவதே டிரம்புக்குக் கொடுக்கும் பதிலடியாக இருக்க வேண்டும் என்றும் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *