முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்களுக்கு தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு.!

வரவிருக்கும் 2029 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்க உள்ள சுமார் 15 கோடி இளம் தலைமுறையினருக்கு (ஜென் Z) தேர்தல் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தத் தேர்தல் ஆணையம் அதிரடித் திட்டங்களை வகுத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை நேரடியாகச் சந்தித்து, வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்முறை, ஜனநாயகத்தின் முக்கியத்துவம் மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கமளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, இளம் தலைமுறையினர் தேர்தல் அரசியலில் ஆர்வமுடன் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையிலும், வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கிலும் இந்தச் சிறப்பு விழிப்புணர்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *