IND VS SL TEST MATCH : வெற்றியை நோக்கி முன்னேறும் இந்திய அணி.!

Advertisements

இலங்கையில் நடைபெற்ற இந்தியா, இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்று இந்திய அணி வெற்றிப்பெற இன்னும் 4 விக்கெட் மட்டுமே மீதம் உள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்களிடையே இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியா, இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெறுகிறது. இதில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 503 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர், களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில்  அனைத்து விக்கெட்களையும் இழந்து 290 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து பாலோ ஆன் ஆகி, நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இலங்கை அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 229 ரன்கள் சேர்த்தது. இதில், அதிகபட்சமாக இலங்கை அணியின் பசிந்து சூரியபண்டாரா 92 ரன்களையும், கமிந்து மெண்டிஸ் 55 ரன்களையும் எடுத்தனர். பந்து வீச்சு தரப்பில் இந்திய அணியின் மானவ் சுதார் 2 விக்கெட்களையும், பிரசித் கிருஷ்ணா,

சிராஜ், ஜடேஜா, சரன்ஷ் ஜெயின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியாவை விட இலங்கை அணி 16 ரன்கள் முன்னிலையில் உள்ளது.  இன்று கடைசி நாள் என்பதால் இந்தியா அணி வெற்றி பெற இன்னும் 4  விக்கெட் தேவை உள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்களிடையே இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *