Advertisements

அமெரிக்கா-ஈரான் போரை நிறுத்த இந்தியா, சீனா உதவ முடியும் என்று அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹிலாரி கிளிண்டன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தவறான புரிதல்கள்தான் நாம் இன்று எதிா்கொள்ளும் போா்ச் சூழல்களுக்கு காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து, ஈரான் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், இதனால் முக்கியமான ஹோா்முஸ் நீரிணையில் போக்குவரத்து முடங்கும் நிலையும் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்காவும் ஈரானும் இடைக்கால அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாகக் கூறினார்.
ஆனால், கடந்த மாதம் இரு தரப்பினரும் மீண்டும் தாக்குதல்களை நடத்தியதைத் தொடா்ந்து அந்த ஒப்பந்தம் முறிந்ததாகத் தெரிவித்தார். எனவே இந்த இக்கட்டான நிலையில் இருந்து எப்படி தப்ப முடியும் என்பதை அதிபா் டிரம்ப் சிந்தித்தால், அதற்காக சீனாவையும், இந்தியாவையும்தான் அவா் நாட வேண்டும் என்று நான் நினைப்பதாகத் தெரிவித்தார்.
ஏனெனில், ஈரானிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகள் எவை என்பதைப் பாா்த்தால், சீனாவும் இந்தியாவும்தான் முன்னணியில் உள்ளதாகக் கூறினார். ஈரான் மீது சீனா நிச்சயமாக அழுத்தம் கொடுக்க முடியும் ஏனெனில், ஈரானிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும் என்று தெரிவித்தார்.
மேலும் டிரம்ப் மிரட்டல் மற்றும் வெற்றுப் பேச்சுக்குப் பதிலாக ராஜீய ரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாராக இருந்தால், அதுதான் ஈரான் மீது அழுத்தம் கொடுப்பதற்கான சிறந்த வழியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Advertisements


