
இயற்கையின் கோரத் தாண்டவத்தால் நேபாள நாடு உலுக்கி எடுக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள பயங்கரப் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை தற்போது 160 ஐத் தாண்டி உள்ளது.
தொடர்மழை மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பல பகுதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ராணுவமும் பேரிடர் மீட்புப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த கோர வெள்ளத்தில் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 50-க்கும் மேற்பட்ட தமிழர்களும் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அவர்களை மீட்கும் பணிகளில் தமிழக அரசும், மத்திய வெளியுறவுத்துறையும் இணைந்து போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.



