வயநாடு இடைத்தேர்தல் பிரியங்கா முன்னிலை!

திருவனந்தபுரம்:

வயநாடு லோக்சபா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா தொடக்கம் முதலே முன்னிலையில் உள்ளார். காலை 10 மணி நிலவரப்படி, அவர் 1,21,476 ஓட்டுகள் பெற்றுள்ளார்.

கேரளா மாநிலம் வயநாடு எம்.பி., பதவியை ராகுல் ராஜினமா செய்ததால், நவ.,13ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரசின் செல்வாக்குமிக்க வயநாடு தொகுதியைத் தக்கவைக்கும் நோக்கில், பிரியங்காவுக்கு வாய்ப்பு கிடைத்தது. தேர்தலில், காங்கிரஸ் சார்பில், அந்தக் கட்சியின் பொதுச்செயலர் பிரியங்கா போட்டியிட்டார். அவரை எதிர்த்து இடது சாரி கூட்டணி சார்பில் சத்யன் மொகேரியும், பா.ஜ., சார்பில் நவ்யாவும் போட்டியிட்டனர்.

62.91 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இந்நிலையில், தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி, இன்று (நவ.,23) 8 மணிக்குத் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

காலை 10 மணி முன்னிலை விவரங்கள்

காங்கிரஸ் (பிரியங்கா) – 1,21,476 ஓட்டுக்கள்.

இடது சாரி கூட்டணி (சத்யன் மொகேரி)- 35,943 ஓட்டுக்கள்.

பா.ஜ., (நவ்யா) – 21, 442 ஓட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *