Advertisements

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு துறைகள் மீது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று மீண்டும் நடைபெறுகிறது. இதில் சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள்.
இதைத்தொடர்ந்து, உறுப்பினர்களின் கேள்விகளுக்குச் சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் சம்பத்குமார் ஆகியோர் பதில் அளித்து உரையாற்றுவார்கள். நிறைவாக, இருவரும் தங்களின் துறைச் சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகின்றனர்.
Advertisements





