சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்.!

Advertisements

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ளது.

இந்த நியமனத்தின்படி, பெலிக்ஸ் ஜெரால்டு அவர்கள் 2026 ஆகஸ்ட் 5 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்குத் தற்போதைய பதவியில் தொடர்வார் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் நலனைப் பேணிக் காக்கும் வகையிலும், அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *