டிடிவி தினகரன் அறிக்கை – பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுமா?

Advertisements

தவெக தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்செயலுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்திற்குள் முதல்வர் ஜோசப் விஜய் விவசாயிகளின் நலன் காப்பதாகப் பேசிக்கொண்டிருந்த அதே வேளையில், வெளியே போராடிய விவசாயிகளைக் காவல்துறையைக் கொண்டு அடக்கியது தவெக அரசின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

வேளாண் நிதிநிலை அறிக்கையில் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வராததால் ஏமாற்றமடைந்த விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் குதித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் முதல்வர் விஜயை வலியுறுத்தியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *