முடிவுக்கு வந்தது முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு!

Advertisements

தமிழக முதலமைச்சர் விஜய்க்கும் அவரது மனைவிக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்தச் செய்தி அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

வழக்கின் ஆரம்பகட்ட விசாரணைகளின்போது இருவரும் நேரில் ஆஜராகாமல் தங்களது வழக்கறிஞர்கள் மூலம் ஆஜராகினர். அவர்கள் பிரபலமாக இருப்பதால் பாதுகாப்பு மற்றும் நடைமுறைச் சிக்கல்களைக் கருதி காணொளி காட்சி மூலம் ஆஜராக அனுமதி கோரப்பட்டது. அதன்படி கடந்த ஜூன் 15-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி இதுகுறித்துச் சில கேள்விகளை எழுப்பியதுடன், இருவரையும் சமரச மையத்திற்கு அனுப்பப் பரிந்துரைத்து வழக்கினை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில் திட்டமிட்டபடி இன்றைய தினம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் அதில் முதலமைச்சர் விஜய் பங்கேற்ற காரணத்தினால் அவரால் நேரில் ஆஜராக இயலவில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விளக்கமளித்தார்.

அதேவேளையில், லண்டனில் வசித்து வரும் சங்கீதா காணொளி காட்சி தொழில்நுட்பம் மூலம் நீதிமன்ற விசாரணையில் நேரடியாக இணைந்தார். அப்போது அவர், தனக்கு இந்த விவாகரத்து வழக்கைத் தொடர்ந்து நடத்த விருப்பமில்லை என்றும், தான் தாக்கல் செய்துள்ள மனுவை முழுமையாக வாபஸ் (Withdraw)பெறுவதாகவும் நீதிபதி முன்பு தெரிவித்தார்.

சங்கீதாவின் இந்த திடீர் மற்றும் முக்கிய முடிவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தவிர்த்து, முதலமைச்சர் விஜய்க்கு எதிராகத் தொடரப்பட்டிருந்த விவாகரத்து வழக்கை அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கடந்த சில மாதங்களாக பேசப்பட்டு வந்த இந்த விவாகரத்து விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *